Friday, 2 September 2022

Om shanti

 🌇மீண்டும் இவ்வுலகில் சொர்க்கம்...!

 

யதா யதாஹி தர்மஸ்ய...

கிலானிர் பவதி பாரத.

அப்யுக்தானம் அதர்மஸ்ய...

ததாட்மானம் சஜாம்யஹம்...


அதாவது எப்பொழுதெல்லாம் இப்பூமியில் துக்கம், அதர்மம், அசாந்தி தலை விரித்து ஆடுகிறதோ, அப்பொழுதெல்லாம் இவ்வுலகில் நான் வந்து அவதரிப்பேன் என்று ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டது போல...


எல்லாம் வல்ல இறைவன் பரம்பொருள் பரமாத்மா சிவ தந்தையானவர் இவ்வுலகில் அவதரித்து வந்து விட்டார்...


கிறிஸ்தவர்களால் கூறப்படுகின்ற சாத்தான் என்றும், அந்திகிறிஸ்து என்றும், இஸ்லாமியர்களால் கூறப்படுகின்ற டஜ்ஜால் என்ற பெயருடையவர்களும், இந்துக்களால் கூறப்படுகின்ற அசுரர்கள் என்ற பெயருடையவர்களும்...


மேலும் பிரீமேசனரி, ராயல் ஃபேமிலி, சீக்ரெட் சொசைட்டி, இன்னும் பலவிதமான பெயர்கள் கொண்டு அழைத்துக்கொண்டு இருக்கக்கூடிய அசுர குணம் படைத்த மனிதர்களுடைய திட்டங்கள்... 


தங்களின் புத்தி சக்தியை பயன்படுத்தி, 

இவ்வுலகை தங்களின் வசப்படுத்தி, முழு உலகையும் ஆண்டுவிடலாம் என்ற பகல் கனவுகள் அனைத்தையும் உடைத்தெறிந்து...


மீண்டும் இவ்வுலகை சொர்க்கமாக்க எல்லாம் வல்ல இறைவன் வந்து விட்டார்...


பொதுவாக உலகில் இப்படிச் சொல்வார்கள்.. மனிதன் ஒன்றை நினைக்க...

தெய்வம் ஒன்றை நினைத்தது என்று...


அந்தக் காரியம் தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது...


இந்த காலகட்டத்தில் நாம் பலவிதமான இன்னல்களையும், துன்பங்களையும், துக்கத்தையும் அனுப















வித்து கொண்டிருந்தாலும்...


இதற்குப் பிறகு வரக்கூடிய ஒரு காலமானது (சத்யுகம்) மிக உயர்ந்த, கனவிலும் நினைத்திராத சொர்க்கம், இப்பூமியில் மீண்டும் வரப்போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை...


மேலும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்... புயலுக்குப் பின் தான் அமைதி என்று...


எனவே இந்த கலியுக இறுதி காலகட்டத்தில், அனைத்து விதமான இன்னல்களை சந்திப்பதற்கும், எதிர் கொள்வதற்கும் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு சக்திகளை கொடுத்து அருள்புரியட்டும்...


எனதருமை அன்புச் சகோதர, சகோதரிகளே..!


இறை சக்தியின் துணையால், மீண்டும் இவ்வுலகை சொர்க்கம் ஆக்கிடுவோம் வாருங்கள்... 


. நல்லது... நன்றி... ஓம் சாந்தி...


            மனமே சிவனை நினைவு செய்...

      

      எல்லாப்

 புகழும் இறைவன் ஒருவருக்கே..!

No comments:

Post a Comment